மாநகரம் இயக்குனருக்கு தயாரிப்பாளரின் அதிரடி பிறந்தநாள் பரிசு..!

240

lokesh kanagaraj

கடந்த வாரம் வெளியான ‘மாநகரம்’ படத்தை பார்த்தவர்கள் பலரும் அந்தப்படத்தின் விறுவிறுப்பையும் கதை சொல்லப்பட்ட பாங்கையும், காட்சி வடிவமைப்புகளில் எடுத்துக்கொண்ட சிரத்தையையும் விடாமல் பாராட்டி வருகிறார்கள்.. இதில் மிகப்பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் அந்தப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் டைரக்சனுக்கு புதியவர்.. யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமலேயே, மிக நேர்த்தியாக ஒரு அனுபவ இயக்குனரைப்போல படத்தை இயக்கியிருந்தார்..

படம் இப்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், நேற்று லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு அதிரடியான பரிசு தர நினைத்த தயாரிப்பு நிறுவனம், தங்களது நிறுவனத்தின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் அவருக்கே வழங்கியுள்ளனர்… இந்த தகவலை லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் வாழ்த்தாகவே உறுதி செய்துள்ளார் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபு.

Comments are closed.