மம்முட்டி தமிழில் நிறைய படங்கள் நடித்துள்ளாரே தவிர தெலுங்கில் நடித்த படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.. அந்த வகையில் தெலுங்கு இயக்குனரான மஹி ராகவ் என்பவர் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் மம்முட்டி.
அதிலும் மறைந்த ஆந்திர முதல்வரான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் கேரக்டரில் தான் நடிக்க இருக்கிறாராம் மம்முட்டி. இந்தப்படத்திற்கு யாத்ரா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மலையாளத்திலும் தமிழிலும் முதல்வர் கேரக்டரில் மம்முட்டி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில தினங்களாக ஒரு யூகமான செய்தியாக பேசப்பட்டு வந்த விஷயத்தை இன்று இயக்குனரும் மம்முட்டியும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளார்கள். ஆந்திர முதல்வர் கேரக்டரில் நடித்தாலும் இந்தப்படம் தெனிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Comments are closed.