”எளிமையானவர் மம்தா பானர்ஜி” – கமல் புகழாரம்

149

நம்ம ஊரில் தான் மூத்த கலைஞர்களுக்கு உரிய மரியாதை தராமல் மேடையில் நிற்க வைத்து அவமானப்படுத்தும் வினோதமெல்லாம் நடக்கும். ஆனால் மேற்கு வங்க முதல்வர் ம்ம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் நடைபெற்ற ‘19-வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா’ துவக்க விழாவிற்கு நமது உலகநாயகன் கமல்ஹாசனை சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவப்படுத்தியுள்ளார்.

இந்த விழாவில் கலந்துகொள்ள அமிதாப் பச்சன், மிதுன் சக்கரவர்த்தி, ஷாருக்கான் உள்ளிட்ட இந்தி சினிமா பிரபலங்களுடன் கமலையும் அழைத்திருந்தது மம்தா பானர்ஜி நம் தமிழ்சினிமா கலைஞர்கள் மீது வைத்திருக்கும் மரியாதையையே சுட்டிக்காட்டுகிறது.

“இந்த விழாவில் கலந்துகொண்ட நான் அங்கே ஒரு மாநிலத்தின் முதல்வரை பார்க்கவில்லை.. ஒரு சகோதரியைத்தான் பார்த்தேன். பெரும்பாலும் நாற்காலியில் உட்காருவதைக்கூட விரும்பாமல் நீண்டநேரம் நின்றுகொண்டே இருந்தார். அங்கே அவர் ஒரு குடும்பத்தின் தலைவியாகத்தான் முன்னின்று விழாவை நடத்தினார். இப்போதுதான் தெரிகிறது அவரை ஏன் அனைவரும் ‘சகோதரி’(தீதி) என அழைக்கிறார்கள் என்று.” என்று ஆச்சர்யம் மாறாமல் சிலாகிக்கிறார் கமல்.

Leave A Reply

Your email address will not be published.