காதலர் தினத்திற்கு முன்னணி நட்சத்திரங்கள் தரப்போகும் பரிசுகள்..!

251

feb 14 specials

இந்தமுறை காதலர் தினம் புதன்கிழமை வருவதாலோ என்னவோ காதல் கதை கொண்ட படங்கள் எதுவும் ரிலீசாக வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அர்ஜூன் தனது மகளை வைத்து காதல் கதையாக இயக்கிய ‘சொளிவிடவா’ படத்தை காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த வெள்ளியன்றே ரிலீஸ் செய்துவிட்டார்.

இந்தநிலையில் தமிழ் திரையுலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள், இசையமைப்பாளர், இயக்குனர்கள் காதலர் தினத்திற்கு தங்களின் பங்களிப்பாக ஏதாவது இருக்கவேண்டுமே என தங்களது படங்களின் பர்ஸ்ட் லுக், டீசர், வீடியோ சிங்கிள், ஆல்பம் என வெரைட்டிகளை நாளை களமிறக்க உள்ளனர்.

அவற்றில் கோகுல் டைரக்சனில் விஜய்சேதுபதி நடித்துவரும் ‘ஜூங்கா’ படத்திலிருந்து ‘கூட்டிப்போ கூடவே’ பாடலின் வீடியோ சிங்கிள்,

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துவரும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் பர்ஸ்ட் லுக்

பி.எஸ்.மித்ரன் டைரக்சனில் விஷால்-சமந்தா நடித்துள்ள இரும்புத்திரை ஆங்ரி பேர்டு வீடியோ பாடல் புரோமோ

விஜய் மில்டன் டைரக்சனில் உருவாகியுள்ள ‘கோலிசோடா-2’ படத்தின் ட்ரெய்லர்

ஆகியவற்றை வெளியிடுவதன் மூலம் காதலர் தினத்தை கலர்புல்லாக்க காத்திருக்கின்றனர்.

அதுமட்டுமல்ல இசையமைப்பாளர் அனிருத் ஏதாவது ஸ்பெஷல் தினம் என்றால் ரசிகர்களின் ரசனைக்கேற்ற மாதிரி பாடல் ஒன்றை தயார் செய்து அதை வெளியிடுவார். அப்படி தான் நாளை (பிப்ரவரி 14) காதலர் தின ஸ்பெஷலாக ஒரு பாடலை வெளியிடவுள்ளார். அந்தப்பாடலுக்கு ஜுலி என்று பெயரிட்டுள்ளனராம்.

இதுதவிர இயக்குனர் கௌதம் மேனன் தனது ஒன்ராகா ஒரிஜினல்ஸ் மூலம், இசை கலைஞர்களின் தனிப்பாடல்களை ஊக்குவிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கௌதம் மேனன் இயக்கத்தில், மதன் கார்க்கி பாடல் வரிகளில் “உலவிரவு” என்ற சிங்கிள் பாடல் தயாராகியுள்ளது.

இந்த பாடலுக்கு கார்த்திக் இசையமைத்ததோடு, பாடலையும் பாடி உள்ளார். இதில் தொகுப்பாளர் திவ்யதர்ஷினி(டிடி) மற்றும் மலையாள நடிகர் டொவினோ தாமஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த “உலவிரவு” முழு பாடலும் காதலர் தினத்தன்று வெளியாகும் என கௌதம் மேனன் அறிவித்துள்ளார்.

Comments are closed.