‘கோச்சடையான்’ இசைவெளியீட்டு விழா வரும் 9ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எட்டு பாடல்களும் படத்தின் தீம் மியூசிக்கும் இடம்பெற்றுள்ளன. பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார்.
ஒப்பனிங் பாடலான ‘எங்கே போகுதோ வானம்’ பாடலை வழக்கமான சென்டிமெண்ட்படி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். இதுதவிர சாதனா சர்கத்துடன் சேர்ந்து ‘மெதுவாகத்தான்’ என ஒரு டூயட்டும் பாடியுள்ளார் எஸ்.பி.பி.
இதில் சூப்பர்ஸ்டார், லதா ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான் என மூவரும் தங்கள் பங்கிற்கு ஆளுக்கு ஒரு பாடல் பாடியுள்ளனர்.
‘மாற்றம் ஒன்றுதான் மாறாதது’ பாடலை ஹரிசரணுடன் இணைந்து பாடியுள்ளார் ரஜினி. 1992ல் வெளியான ‘மன்னன்’ படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட 22 வருடம் கழித்து ரஜினி பாடும் இரண்டாவது பாடல் இது.
‘மணப்பெண்ணின் சத்தியம்’ என்ற பாடலை லதா ரஜினியும் ‘கர்ம வீரன்’ பாடலை ரஹ்மானும் அவரது சகோதரி ஏ.ஆர்.ரெஹைனாவும் இணைந்து பாடியுள்ளனர்.
இதுவும் தவிர ‘எங்கள் கோச்சடையான்’ என்கிற குழுவினர் பாடும் வாழ்த்துப்பாடலும் உண்டு.