கடைக்குட்டி சிங்கம் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய விஜய் டிவி..!

197

kks rights

கார்த்தியை வைத்து தற்போது ‘கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.. நாயகியாக சாயிஷா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர், அர்த்தனா ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், கார்த்தியின் அக்காக்களாக மௌனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி என்று 5 பேர் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தில் மாதம் 1½லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் கெத்தான விவாசாயி வேடத்தில் கார்த்தி நடித்துள்ளார். தான் ஒரு விவசாயி என்பதை பைக் நம்பர் ப்ளேட் முதல் பல இடங்களில் பெருமையாக சொல்லிக்கொள்ளும் ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார் கார்த்தி.

இந்தப்படத்தின் சாட்டிலைட் உரிமையை மிகப்பெரிய விலைக்கு விஜய் டிவி கைப்பற்றியுள்ளது.

Comments are closed.