‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இயக்குனர் பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் தான் ‘ரஜினி முருகன்’. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மலையாள நடிகையான கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த இந்தப்படத்தின் படப்பிடிப்புக்கு இப்போது சிறிய பிரேக் கிடைத்துள்ளது.
காரணம் கதாநாயகி கீர்த்திக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவால் சிகிச்சை மற்றும் ஓய்வுக்காக கேரளா சென்றுவிட்டார். சமீபத்தில் தான் இந்தப்படத்தின் க்ளைமாக்ஸை மதுரையில் ஷூட் பண்ணினார்கள்.. கிட்டத்தட்ட 75 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்ட ரஜினி முருகன்’ டீம், இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் மதுரைக்கு திரும்ப உள்ளனர்.
Comments are closed.