அல்லு அர்ஜுனுக்கு பெண்குழந்தை ; ஞானவேல்ராஜா வாழ்த்து..!

232

allu-arjun-2
தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் என அழைக்கப்படுபவர் அல்லு அர்ஜுன்.. தெலுங்கில் முன்னி நடிகராக உள்ள இவர் கடந்த 2011ல் சினேகா ரெட்டி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண்குழந்தை உள்ள நிலையில் இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது..

‘அழகான பெண்குழந்தை.. ஒரு ஆண்.. ஒரு பெண்.. இதுபோதும் கடவுளுக்கு நன்றி” என இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். விரைவில் அல்லு அர்ஜுனை வைத்து தமிழில் படம் தயாரிக்க இருக்கும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா ‘லட்சுமி வந்தாச்சு” என தனது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் அல்லு அர்ஜுனுக்கு தெரிவித்துள்ளார்.

Comments are closed.