சமீபகாலமாக படங்கள் விமல் நடித்த எதுவும் வரவில்லைதான்.. வந்த படங்கள் கூட பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. ஆனாலும் உற்சாகமாக இருக்கிறார் நடிகர் விமல்.. காரணம் இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிக்கும் ‘மன்னர் வகையறா’ படம் நிறைவடையும் நிலையில் இருக்கிறது. அத்துடன் விரைவில் திரைக்கு வரவும் உள்ளதாம்.
அதற்கடுத்ததாக சுசீந்திரன் தயாரிக்க அவரது உதவியாளர் சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப்படத்தில் இமான் இசை, விஜய் மில்டன் ஒளிப்பதிவு, பாண்டிராஜ் வசனம் என பிரபலங்கள் இணைகிறார்கள்.
இதுதவிர ராஜதந்திரம் இயக்குனர் அமீத் படத்திலும் நடிக்க இருக்கிறார். இத்துடன் இன்னும் நான்கு பிரபலங்களின் படங்களும் பேச்சு வார்த்தையில் இருக்கிறதாம்.. ஆக 2017 விமலுக்கு சுபிட்சமான ஆண்டாக இருக்கும் என்றே நம்புகிறார்.
Comments are closed.