‘காற்று வெளியிடை’யும் காதலர் தினமும் பின்னே கார்த்தியும்..!

198

katru-veliyidai

கார்த்தி நடித்துள்ள மிக பிரமாண்டமான பட்ஜெட் படமான ‘காஷ்மோரா’ வரும் தீபாவளிக்கு வெளியாக இருப்பது நமக்கு தெரியும்.. ஆக்சன், ஹாரர், காமெடி என அனைத்து அம்சங்களையும் கொண்ட இந்தப்படத்தில் ‘காதல்’ மட்டும் இல்லை என கார்த்தியே சொல்லிவிட்டார்.. இது இப்படி இருக்க மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் ‘காற்று வெளியிடை’ படத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார் கார்த்தி.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகிவரும் இந்தப்படத்தின் கதாநாயகியாக அதிதி ராவ் நடிக்கிறார்.. இந்தப்படத்தின் டைட்டிலே சொல்கிறது இது நிச்சயம் காதல் படம் தான் என்பதை.. அதனாலேயே இந்தப்படத்தை காதலர் தினத்தன்று வெளியிட இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.. இருப்பினும் மணிரத்னம் மனதில் இருப்பதை அவர் அறிவித்தால் மட்டுமே உண்டு.

Comments are closed.