காற்றின் மொழி படப்பிடிப்பு துவங்கியது..!

209

kaatrin mozhi

இயக்குநர் ராதா மோகன் – ஜோதிகா கூட்டணியில் வெளியாகி ஹிட் அடித்த படம் மொழி. இப்படத்திற்கு பிறகு 2-வது முறையாக காற்றின் மொழி படத்தின் மூலம் இவர்கள் இணைந்துள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு நவம்பரில் இந்தியில் வெளியான ’துமாரி சுலு’ படத்தின் ரீமேக்காக காற்றின் மொழி உருவாகிறது.

துமாரி சுலு படத்தில் வித்யாபாலன் நடித்த கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கிறார். ஜோதிகாவுக்கு கணவராக விதார்த் நடிக்கிறார். படத்தின் ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துச்சாமி, எடிட்டராக கே.எல்.பிரவீன் ஒப்பந்தமாகியுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ள நிலையில் நடிகர் சிவக்குமார், சூர்யா ஆகியோர் முதல்நாள் படப்பிடிப்பு பூஜையில் கலந்து கொண்டனர். போஃப்டா மீடியா சார்பாக தனஞ்செயன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் 50 நாட்கள் நடைபெறும் என்றும் , படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Comments are closed.