புரிந்துகொள்ள முடியாத பிள்ளை – கஸ்தூரிராஜாவின் கவலையும் வைரமுத்துவின் வாஞ்சை வார்தைகளும்
இரண்டாம் உலகம் படத்தின் படத்தின் டிரைலரை வெளியிட வந்த சூர்யா ஆர்யாவை புகழ்ந்து தள்ளி விட்டார்.
பேச்சுவாக்கில் ஆர்யாவை பர்றிய ஒரு ரகசியத்தையும் வெளியிட்டார். “ ஒவ்வொரு படத்திற்கும் உடலை மாற்றி காட்டுவதில் ஆர்யா அக்கறையோடு செயல்படுகிறார். இதற்காக பீச் ரோட்டில் திருவான்மியூரிலிருந்து சைக்கிளில் மகாபலிபுரம் வரைக்கும் சென்று வருகிறார்.” என்று ஆர்யாவின் ரகசியத்தை உடைத்தார்.
செல்வராகவனின் தந்தை கஸ்தூரிராஜா பேசும்போது, “ செல்வாவை எப்படியாவது இயக்குனராக்கி விடுங்கள் என்று என் மனைவி சொன்ன போது அவனுக்கு என்ன தெரியும்னு கேட்டேன். ”இல்லப்பா ஒரு கதை வெச்சிருக்கான்”னு என் மகளும் சொன்னாங்க.. ஏன்னா செல்வா என்ன பண்றான், என்ன பேசுகிறான்னு எங்களுக்கு புரியவே புரியாது. இப்படி எங்களால் புரிந்து கொள்ள முடியாத செல்வாவை புரிந்து கொண்டு படம் பண்ண வந்த பிவிபி தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி.” என்று பேசி அமர்ந்தார். பிறகு பேச வந்த வைரமுத்து, “ செல்வாவை புரிந்து கொள்ள முடியாத பிள்ளை என்று கஸ்தூரி சொன்னார். ஒரு குளத்தில் மீன்கள், தவளைகள் இருக்கும். அதில் பூக்களும் இருக்கும். ஆனால் குளத்தில் உள்ள பூக்களில் தேன் இருப்பது எங்கிருந்தோ வரும் வண்டுகளுக்குதான் தெரியுமே தவிர பக்கத்தில் உள்ளவைகளுக்கு தெரியாது. அது போல் தான் பக்கத்தில் உள்ள செல்வாவை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் பிவிபி நிறுவனம் புரிந்து கொண்டது.” என்று பஞ்ச் வைத்தார் கவிப்பேரரசர்.