கரு.பழனியப்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

115


‘பார்த்திபன் கனவு’, ‘பிரிவோம் சந்திப்போம்’, போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவர் கரு.பழனியப்பன். தொன்மையும், கலாச்சாரப் பெருமையும் மிகுந்த காரைக்குடியைப் பூர்வீகமாகக் கொண்டவர். வாசிப்பை நேசிக்கும் இவர், பத்திரிகையாளராக பயணித்து, சினிமாவில் சங்கமித்தவர்.

இவரது படங்கள் எப்போதும் அதிக சோகம், வன்முறை எதுவும் இல்லாமல் நிதானமான நிலையில் மனதை வருடுவதாக இருக்கும். அழுத்தம் திருத்தமாக இவர் உச்சரிக்கும் தமிழுக்கும் கருத்தாழத்துடன் இவர் எடுத்துவைக்கும் வாதங்களுக்கும் கூட பலர் ரசிகர்களாக இருக்கின்றனர்.

‘மந்திர புன்னகை’ படம் மூலம் கதாநாயகனாகவும் மாறிய அவர் சமீபத்தில் வெளியான ‘ஜன்னல் ஓரம்’ படம் மூலம் மீண்டும் டைரக்‌ஷனுக்கு திரும்பினார். இதுவரை ஆறு படங்களை இயக்கியுள்ளார். இன்று பிறந்தநாள் காணும் கரு.பழனியப்பனுக்கு behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது

Leave A Reply

Your email address will not be published.