
பெங்களூர் வாழ் தமிழரான கரண் வாசுதேவன் தயாரித்து இசையமைத்து, இயக்கியுள்ள குறும்படம் தான் ‘மரணத்தின் ஜகடம்’.. அதாவது மரணத்திற்கான யுத்தம் என்பது அர்த்தம்.. மதுரையை சேர்ந்த தாதாவை பெங்களூரில் வைத்து போட்டுத்தள்ளும் ஒரு போலீஸ் அதிகாரியின் ஆக்சன் தான் மையக்கரு.. படமாக்கிய விதத்தில் கௌதம் மேனன் பாணியை கையாண்டிருந்தார் இயக்குனர் கரண் வாசுதேவன்.
தனது பெங்களூர் நண்பர்களுடன் சேர்ந்து இந்தப்படத்தை இயக்கியுள்ள கரண் வாசுதேவன், நேற்று முன்தினம் இந்த குறும்படத்தை இயக்குனர்கள் அமீர், பிரவீன் காந்தி, கௌரவ் மற்றும் செந்தில் உட்பட சில பிரபலங்கள் முன்னிலையில் திரையிட்டு காட்டினார்.
படத்தை பார்த்த அமீர் அவர்களை பாராட்டியதோடு குறும்படம் எடுக்கும்போது அவர்கள் கையாளவேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய அம்சங்கள் குறித்தும் விளக்கம் கொடுத்து குறும்பட குழுவினரை உற்சாகப்படுத்தினார்.
Comments are closed.