‘கப்பல்’ விடும் வாத்தியார் வீட்டு பிள்ளை சோனம் பஜ்வா..!

236

 

பூனம் பஜ்வா தெரியும்.. அது யார் சோனம் பஜ்வா..? சமீபத்தில் விஜய், விக்ரம் கலந்துகொள்ள ஏ.ஆர்.ரஹ்மான் இசைத்தகட்டை வெளியிட்டாரே, அந்த ‘கப்பல்’ படத்தின் கதாநாயகி தான் இந்த சோனம் பஜ்வா.. பஞ்சாபி தான் பிறந்தது என்றாலும் வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான்.

அப்பா காலேஜ் புரபெசர்.. அம்மா பள்ளி ஆசிரியை.. சுருக்கமாக சொன்னால் வாத்தியார் வீட்டுப்பிள்ளை.. ‘கப்பல்’ படத்திற்கான ஆடிஷனில் ஆரம்பித்து ஆடியோ ரிலீஸ் வரையிலான தனது பயணத்தை இன்னும் நம்பமுடியவில்லை என கண்களை அகல விரிக்கிறார் சோனம் பஜ்வா.

அதிலும் தான் நடிக்கும் முதல் படமே இயக்குனர் ஷங்கர் வெளியிடும் படமாக அமைந்ததில் சோனம் பஜ்வாவுக்கு கொள்ளை சந்தோஷமே.. இந்தப்படத்தை கார்த்திக் ஜி.கிரிஷ் என்பவர் இயக்கியுள்ளார். வைபவ் கதாநாயகனாக கருணாகரன், வி.டி.வி கணேஷ் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள்.

Comments are closed.