கால வரிசைப்படி தயாராகும் கண்ணதாசனின் திரைப் பாடல்கள்

62

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பல பாடல்களை தந்து ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தவர்களில் கண்ணதாசனுக்கு இணை யாரும் இல்லை என்றே சொல்லலாம். அவரின் பாடல்கள் பல தொகுதிகளாக ஏற்கனவே வெளி வந்திருந்தாலும் எந்த பாடல் எப்போது எழுதப்பட்டது என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இப்போது அந்த குறையை நிவர்த்தி செய்யும் பணியில் கண்ணதாசன் பதிப்பகம் இறங்கியுள்ளது.

இதற்காக எந்த பாடல் எந்த வருடத்தில், எந்த தேதியில், எங்கு எழுதப்பட்டது என்பதை துல்லியமாக கண்டறியும் பணியில் இறங்கி, அதை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள். காலவரிசைப்படி தொகுக்கப்பட்ட கவியரசரின் பாடல்களின் தொகுப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.