பிரமிக்க வைக்கும் கமலின் வேகம்…!

201

 

இன்றைய இளம் முன்னணி நடிகர்கள் தோற்றார்கள் போங்கள் என்று சொல்லும் வகையில் கமல் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் காட்டிவரும் வேகம் பிரமிக்க வைக்கிறது. கிட்டத்தட்ட 199௦க்கு முன் பார்த்த கமலை இப்போது பார்க்கமுடிகிறது என்றால் அது மறுக்கமுடியாத உண்மை.

காரணம் அதற்கு முன்புதான் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களை நடித்தார் கமல். அதன் பின் வந்த காலங்களில் வருடத்திற்கு ஒன்று என்கிற கணக்கில் அது சுருங்கியது. ஆனால் இதோ இப்போது இந்த வருடத்தில் நடிக்க ஆரம்பித்த படங்களான ‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டன. இப்போது ‘பாபநாசம்’ படத்திற்கான டப்பிங்கையும் ஆரம்பித்துவிட்டார் கமல்.

விஸ்வரூபம்-2 படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து கிராபிக்ஸ் பணிகள் மட்டுமே பாக்கி இருக்கின்றன. ஆக கமலின் மூன்று படங்கள் ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ளன என்பது இன்றைய சூழலில் பிரமிக்க வைக்கும் செய்தி தான். இனி ரிலீஸ் தேதியை அறிவிக்கவேண்டியது மட்டும்தான் பாக்கி. கூடவே அடுத்த படம் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டால் கூடுதல் சந்தோசம்.

Comments are closed.