“போக்குவரத்து ஊழியர்களுக்கு விலைமதிப்பில்லா பொங்கல் பரிசு” ; முதல்வருக்கு கமல் கோரிக்கை..!

239

Kamalhassan (59)

புதிய ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று மாலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக முதலமைச்சர், மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் மனதில் கொண்டு, தயவாய் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். பொங்கலுக்கு அதுவே அரசுதரும் விலைமதிப்பிலா பரிசாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.