‘எங்கேயும் எப்போதும்’ சரவணன், ‘மான் கராத்தே’ திருக்குமரன், ‘அரிமா நம்பி’ ஆனந்த் ஷங்கர் என ஏ.ஆர்.முருகதாஸின் பாசறையில் உதவி இயக்குனர்களாக இருந்து வெளிவந்தவர்கள் அனைவரும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்கள்.. அந்த பட்டியலில் இப்போது புதிதாக சேர இருப்பவர் இயக்குனர் ஹர்ஷவர்தன்.
முருகதாஸுடன் ஏழாம் அறிவு, துப்பாக்கி ஆகிய படங்களில் உதவி இயக்குனராக வேலைபார்த்தவர் இப்போது தனியாக கடை போட்டுவிட்டார். இவர் எம்.ஜி.ஆர் நடித்த ‘மந்திரிகுமாரி’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஜே.ஜி.விஜயம் என்பவரின் பேரன். இவர் இயக்கவுள்ள இன்னும் பெயரிடப்படாத படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் ‘மெட்ராஸ்’ கலையரசன்.
Comments are closed.