370க்கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீஸாகும் ‘காக்கி சட்டை’..!

195

சிவகார்த்திகேயன் ஆக்சன் ஹீரோ அவதாரம் எடுத்துள்ள ‘காக்கி சட்டை’ படம் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ரிலீஸ் ஆகப்போகிறது, சிவகார்த்திகேயன் போலீஸாக நடிக்கிறார், ஸ்ரீதிவ்யா அவருக்கு ஜோடியா நடிக்கிறாங்க, அனிருத் இசையமைக்கிறார், தனுஷ் தயாரித்திருக்கிறார் அப்படிங்கிறதைத்தவிர  ‘காக்கி சட்டை’ பற்றி புதுசா என்ன சொல்லப்போறீங்கன்னு நினைக்கலாம்.

 

விஷயம் இருக்குங்க.. தனுஷ் தயாரித்த ‘வி.ஐ.பி’ படத்தை ரிலீஸ் செய்ததை தொடர்ந்து அவர் தயாரித்திருக்கும் இந்தப்படத்தையும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தான் வெளியிடுகிறார். கிட்டத்தட்ட 37௦க்கு அதிகமான தியேட்டர்களில் படத்தை வெளியிடுகிறார்களாம்.

 

பிரஸ்மீட்டுக்கோ, ஆடியோ ரிலீஸுக்கோ தனுஷ் வராததால் தங்களுக்குள் பிரச்சனை இருப்பதாக வெளியான செய்தியை பகிரங்கமாக மறுத்துள்ளார் சிவகார்த்திகேயன். தனுஷ் வராததற்கு காரணம் ஆரம்பத்திலேயே படத்தை தங்களை நம்பி ஒப்படைத்துவிட்டதுதான் காரணம் என தனுஷே சொன்னதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

 

அதேபோல ரஜினி சாரை இமிடேட் பணி நடிக்கவில்லை என்றும், அதையும் மீறி சில காட்சிகளில் அப்படி தெரிந்தால் அது, தீவிர ரஜினி வெறியனான தனக்குள் இருந்து தன்னை அறியாமல் வெளிப்பட்டதாகத்தான் இருக்கும் என்றும் லாஜிக் சொல்கிறார் சிவகார்த்திகேயன். இதில் ஒரு புது முயற்சியாக மனோபாலா நடனம் ஆடியிருக்கிறாராம். அவருக்கு டான்ஸ் ஸ்டெப் சொல்லிக்கொடுத்து ஹெல்ப் பண்ணினாராம் சிவகார்த்திகேயன்.

Comments are closed.