ஹேப்பி பர்த்டே ட்டூ வேதிகா..!

226

ஆக்‌ஷன்கிங் அர்ஜூனால் ‘மதராஸி’ படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர் வேதிகா. அதன்பிறகு முனி என்ற வெற்றிப் படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்தாலும் பெரிதாக எதுவும் ஹிட்டாகவில்லை. பாலாவின் ‘பரதேசி’க்குப் பிறகு அவருக்கு நடிக்கும் வாய்ப்புல்ல கேரக்டர்கள் தேடி வருகிறது. அப்படி வந்தது தான் வசந்தபாலன் இயக்கிய ‘காவியத்தலைவன்’.

 

அந்தப்படத்தில் சித்தார்த் ஜோடியாக நடிப்பில் புதியமுகம் காட்டினார் வேதிகா. தொடர்ந்து மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்த அவர், தற்போது மலையாளத்தில் மீண்டும் பிருத்விராஜுடன் ஒரு படம், கன்னடத்தில் ‘சிவலிங்கா’ படத்தில் சிவராஜ்குமாருடன் ஜோடியாக என செலக்டிவாக, அதேசமயம் ஆக்டிவாக இருக்கிறார். இன்று பிறந்தநாள் காணும், வேதிகாவுக்கு, நமது behind frames  தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Comments are closed.