கடலோர கவிதைகள் படத்தில ‘பொடிநடையா போறவரே’ என சத்யராஜை விரட்டி விரட்டி பாடுவாரே அந்த ரஞ்சனியை ஒருமுறை மனக்கண் முன்னால் கொண்டுவந்து ஞாபகப்படுத்திப் பாருங்கள். காரணம் இருபது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் ரஞ்சனி. ஆனால் தமிழில் அல்ல. மலையாளத்தில். கடைசியாக ஜெயராமுக்கு ஜோடியாக ஒரு மலையாள படத்தில் நடித்திருந்தார் ரஞ்சனி.
அடிப்படையில் ரஞ்சனி கேரளாவை சேர்ந்தவர். இவரது சமகாலத்து நடிகைகளான பூர்ணிமா பாக்யராஜும் மஞ்சு வாரியரும் பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் நடிப்பதற்காக மீண்டும் திரையுலகில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள். அதுவும் மோகன்லாலுக்கு ஜோடியாக. அவர்களை தொடர்ந்து ‘கூத்தாரா’ என்ற படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் ரஞ்சனி. இவர் ஹீரோயினாக கொடிகட்டிப் பறந்த காலத்தில் சில படங்களில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.