மலேசிய ரசிகர்களுக்கு ‘கபாலி’ ரிலீஸ் தரப்போகும் இன்ப அதிர்ச்சி..!

172

kabali 4
கிட்டத்தட்ட முக்கால்வாசி கதை மலேசியாவில் தான் நடக்கிறதோ என நினைக்கும் அளவுக்கு மலேசியாவிலேயே முகாமிட்டு சூப்பர்ஸ்டாரின் ‘கபாலி’ படத்தின் பல நாள் ஷூட்டிங்கை நடத்தியுள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.. இந்த ஷூட்டிங் நாட்களில் மலேசியாவே திருவிழாக்கோலம் போன்ன்டதுபோல ரஜினி’மேனியாவால் கிடுகிடுத்தது.

அந்த அளவுக்கு மலேசிய மக்களின் மனதில் இந்தமுறை அழுத்தமாக பதிந்துவிட்டார் சூப்பர்ஸ்டார். தனால் மலேசிய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாகவும், தமிழ்சினிமாவின் மொழி எல்லையை இன்னும் கொஞ்சம் விரிவுபடுத்தும் விதமாகவும் ‘கபாலி’ படத்தை மலாய் மொழியிலும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனராம்.

வழக்கமாக ரஜினி படங்களை மலேசியாவில் தமிழிலேயே திரையிடுவதுதான் வழக்கம்.. காரணம் தமிழ் ரசிகர்கள் அங்கே அதிகம் என்பதால்.. அதற்கே கூட்டம் அள்ளும்.. இப்போது மலாய் ரசிகர்களையும் கபாலி’ தன்வசப்படுத்த போகிறார் போங்கள்..

Comments are closed.