கடந்த சில தினங்களுக்கு முன் இயக்குநனர் பாலா டைரக்சனில் ஜோதிகா நடிப்பதாக தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.. அதை தொடர்ந்து அந்தப்படத்தில் ஜி.வி.பிரகாஷும் இன்னொரு கதாபாத்திரத்தில் இணைந்தது இன்னும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது..
தற்போது இந்தப்படத்திற்கு ‘நாச்சியார்’ என டைட்டில் வைத்து இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் பாலா.. ஜீன்ஸ் சட்டை அணிந்து லுங்கி கட்டிய ஜோதிகா கைக்குழந்தையை குளுப்பாட்டுவது போலவும் கைவிலங்குடன் பல் விளக்குவது போன்று அமர்ந்துள்ள ஜி.வி.பிரகாஷ் அதை வேடிக்கை பார்ப்பது போன்றும் வெளியாகியுள்ள அந்த போஸ்டர் பார்க்கவே படு வித்தியாசமாக இருக்கிறது.
அது மட்டுமல்ல முள்வேலி கம்பியும் சாக்கும் சுற்றப்பட்ட கைகளுடன் நிற்பது போன்ற ஜோதிகாவின் இன்னொரு போஸ்டரும் வெளியாகி மிரட்டுகிறது. பாலா எந்த விதமாக இந்தப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் என்பதை இந்தமுறையும் கணிக்க முடியாது என்பது உறுதி. இந்தப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார் என்பது படத்திற்கு மைலேஜ் தரும் இன்னொரு அம்சம் ஆகும்.

Comments are closed.