ஜெயம் ரவி-அரவிந்த்சாமி கூட்டணியில் உருவாகியுள்ள படம் போகன்.. ஹன்ஷிகா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்கிய லசுமன் தான் இயக்கியுள்ளார். இந்தப்படத்தை ஐசரி கணேஷுடன் இணைந்து பிரபுதேவா தயாரித்துள்ளார்..
சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் ஆடியோ ரிலீஸை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தனர் ‘போகன்’ குழுவினர்.. அப்போது பேசிய பிரபுதேவா, “ஜெயம் ரவி ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்றால் கவலைப்படவே தேவையில்லை.. காரணம் அவரே ஒரு குட்டி கமல் மாதிரி. சினிமாவில் சகல துறைகளை பற்றியும் நன்கு அறிந்து வைத்திருப்பவர் என்பதால் எந்த இடத்திலும் தவறு நிகழாதவாறு பார்த்துக்கொள்வார்” என புகழாரம் சூட்டினார்.
Comments are closed.