அக்-25ல் ஜருகண்டி ரிலீஸ்..!

248

jarugandi

சமீபத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படங்கள் போலவே அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும் தனது ஜருகண்டி படமும் வரவேற்பை பெறும் என நம்புகிறார் நடிகாராக இருந்து தயாரிப்பாளர் ஆக மாறியுள்ள நிதின் சத்யா. பத்ரி கஸ்தூரி உடன் இணைந்து, தனது சொந்த நிறுவனமான ஸ்வேத் குரூப் சார்பில் ஜருகண்டி படத்தை தயாரித்திருக்கிறார் நிதின் சத்யா.

ஜெய் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தின் கதாநாயகியாக ரெபா மோனிகா ஜான் நடித்துள்ளார். மேலும் டேனியல், ரோபோ ஷங்கர், இளவரசு, போஸ் வெங்கட், ஜி.எம்.குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நடிகர் ஜெய் பற்றி நிதின் சத்யா கூறும்போது, “இந்த படத்தின் மூலம் ஜெய் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாங்கள் நெருங்கிய நண்பர்களாக இருப்பது இந்த படத்துக்கு எந்த வகையிலும் தடையாக இல்லை. உண்மையில், அவர் முன்பு இருந்ததைவிட அதிக பொறுப்புடனும், கவனத்துடனும் செயல்பட்டார். படப்பிடிப்பு முழுவதும் நல்ல முறையில் நடக்க முழு ஒத்துழைப்பை கொடுத்தார். அவர் தன்னை ஒரு சிறந்த நடிகனாக மேம்படுத்த மிகவும் முயற்சிகள் எடுத்து நடித்திருக்கிறார்.

ரெபா மோனிகா ஜான் பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் மிகவும் ட்ரெண்டியாக நடித்திருக்கிறார், போபோ சசி இசையில் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது, அவரது பின்னணி இசையும் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார் நிதின் சத்யா..

Comments are closed.