போராட்ட களத்திற்கு நேரில் சென்ற நயன்தாரா..!

227

nayanthara in jallikkattu - marina crowd 1

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் “ஜல்லிக்கட்டு தடை நீக்க நிரந்தர தீர்வு” கேட்டு போராடும் போராட்டத்திற்கு மொழி கடந்து நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆதரவும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். விஜய், சூர்யா, கார்த்தி ஆகியோரும் போராட்ட காலத்திற்கே வந்து அமர்ந்தனர்..

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் கமலஹாசன் இலக்கை அடையும் வரை தற்போது போன்று அறவழியில் போராடுமாறு கருத்து தெரிவித்து உள்ளார். அந்தவகையில் மொழியால் மலையாளியாக இருந்தாலும் ஏற்கனவே ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த நடிகை நயன்தாரா மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் மெரினா கடற்கரைக்கு முகமூடி நேற்று நள்ளிரவில் வந்து மக்களோடு மக்களாக கொஞ்ச நேரம் கலந்துகொண்டு சென்றார்.

பிரபலமான நடிகையாக இருந்தாலும் அவரை பார்த்து போராட்டக்காரர்கள் ஆரவாரம் செய்யவில்லை. நயன்தாராவிற்கு இருக்கும் தைரியமும், ஆர்வம், உணர்வு தமிழ் நடிகைகளுக்கு இல்லை என்பது ஆச்சர்யம் தான்

Comments are closed.