அக்-11ல் வெளியாகிறது ‘இவன் வேற மாதிரி’ ட்ரெய்லர்

65

‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கிவரும் ‘இவன் வேற மாதிரி’ படம் ரசிகர்களிடம் தனி கவனம் பெற்றுள்ளது என்பது உண்மை. யு.டிவியும் திருப்பதி பிரதர்ஸும் இணைந்து தயாரிப்பது, படத்தின் இயக்குனர் சரவணனுக்கும் அதில் ஹீரோவாக நடிக்கும் விக்ரம் பிரபுவுக்கும் இரண்டாவது படம் என்பது உட்பட படத்திற்கு மைலேஜ் தரும் விஷயங்கள் நிறைய இருக்கின்றன.

இந்தப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சுரபி என்பவர் நடித்துள்ளார். ‘எங்கேயும் எப்போதும்’ ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படங்களுக்கு இசையமைத்த சி.சத்யா தான் இந்தப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட படத்தின் 90 சதவீத வேலைகளை முடித்துவிட்ட இயக்குனர் சரவணன், ரிலீஸுக்கான வேலைகளில் பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இந்தப்படத்தின் ட்ரெய்லரை வரும் அக்-11ஆம் தேதி வெளியிடுகிறார்கள். முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளை உள்ளடக்கி இந்த ட்ரெய்லர் வெளியாவதால், ட்ரெய்லரே பிரமிக்க வைப்பதோடு படத்தை பற்றிய எதிர்பார்ப்பையும் அதிகரிக்க வைக்கும் வகையில் இருக்கிறதாம். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை அடுத்த வாரத்தில் நடத்த முடிவு செய்துள்ளனர். ஆடியோவை ரிலீஸ் பண்ணிய கையோடு சரியாக ஒரு மாதம் கழித்து நம்பர் மூன்றாவது வாரத்தில் படத்தை ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.