
கடந்த வெள்ளியன்று தமிழ் மற்றும் இந்தியில் மாதவன் நடிப்பில் வெளியான ‘இறுதிச்சுற்று’ படம் ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பை பெற்றுள்ளது.. குறிப்பாக கோச்சாக நடித்த மாதவன், நாயகியாக நடித்த பாக்ஸிங் வீராங்கனை ரித்திகா சிங் இருவரும் தங்களது அபார நடிப்பால் ரசிகர்களின் மனதை அள்ளிவிட்டார்கள். வழக்கமாக படங்களை குறைசொல்லும் சோஷியல் மீடியாவாசிகள் இந்தப்படத்தை புகழ்ந்து தள்ளுகின்றனர்..
சூட்டோடு சூடாக இந்தப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க வான்டேட் ஆக முன்வந்துள்ளார் நடிகர் வெங்கடேஷ்.. தமிழில் நல்ல படங்கள் வரும்போதெல்லாம் அதை கொத்திக்கொண்டு செல்வது இவரது வாடிக்கைதானே.. இறுதிச்சுற்று படத்தின் க்ளைமாக்ஸ் பாக்ஸிங் காட்சியை மிக பிரமாண்டமாக படமாக்கி இருந்தார் இயக்குனர் சுதா கொங்கரா.. இனி தெலுங்கிலும் இவர் மீண்டும் ஒருமுறை இதை படமாக்கும் சவாலை சந்திக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.