தீவிரவாதி போல நடந்துகொண்ட ஹாரிஸ் ஜெயராஜ்..!.

203

irumugan-success-meet-1

கடந்த வியாழன் அன்று ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா நடித்த ‘இருமுகன்’ படம் வெளியானது.. படத்தை பொறுத்தவரை கலவையான விமர்சனங்கள் எழுந்தன.. குறிப்பாக எதிர்மறையான விமர்சனங்களும் அதிகம் வெளியாகின.. ஆனால் அனைத்தையும் தாண்டி, படம் மாபெரும் வெற்றிபெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.. இதன் வெற்றியை கொண்டாட படத்தின் தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் படத்தின் வெற்றிச்சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்..

இந்த நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சுவையான அனுபவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார்.. அதாவது அவர் வெளிநாட்டு பயணம் ஒன்றுக்கு தயாராகிக்கொண்டு இருந்த நேரத்தில், திடீரென இருமுகன் படத்தின் டீசரை தயார்செய்து தரமுடியுமா என கேட்டார்களாம்.

இக்கட்டான சூழல் தான் என்றாலும், விமானத்தில் தான் பயணம் செய்த நேரத்தில் கம்ப்யூட்டரில் இசைக்கோர்ப்பு வேலைகளை செய்ய ஆரம்பித்துவிட்டாராம். விமானப்பணிப்பெண்கள் அவரை தீவிரவாதிபோல பார்க்க ஆரம்பித்துவிட்டார்களாம்.. இறுதியாக டீசரை தயார்செய்து அவர்களிடம் போட்டுக்கட்டியதும் தான் இவர் இசையமைப்பாளர் என்றே அவர்களுக்கு தெரியவந்ததாம்.

Comments are closed.