பைக் மற்றும் கார் ரேஸ் சாம்பியனான அலிஷா பார்ப்பதற்கு ஹாலிவுட் ஆக்ஷன் பட ஹீரோயின் மாதிரி இருக்கிறார். சினிமாமீது அவ்வளவாக ஆர்வம் இல்லாத அலிஷா, ஆசைக்கு ஒரு சினிமாவில் நடிச்சுட்டு ஒதுங்கிடணும் என்ற அளவில்தான் ஆசையாம். அப்படி நடிக்க வாய்ப்பு வந்தாலும் அஜீத்துடனே நடிக்க விரும்புவதாக கூறியிருந்தார். காரணம் கேட்டால், “அவரும் ஒரு இருசக்கர வேகப்பந்தய வீரர். அவரால் தான் என்னை நன்கு புரிந்துகொள்ள முடியும்” என்பது அவரது பதில்.
ஆனால் இப்போது வாய்ப்பு தேடிவந்திருப்பது அதர்வாவுடன் நடிக்கத்தான். அதர்வா, பிரியா ஆனந்த் நடிக்கும் ‘இரும்புக்குதிரை’ படத்தில் இப்போது அலிஷாவும் நுழைந்திருக்கிறார். யுவராஜ் போஸ் இயக்கிவரும் இந்தப்படத்தில் பைக் சேசிங் காட்சிகளும் படமாக்கப்பட்டிருக்கின்றன. இந்தக்காட்சிகளில் ஒரு நிஜ பைக்கர் இருந்தால்தான் நன்றாக இருக்கும் என்பதால் அலிஷாவுக்கு அடித்திருக்கிறது இந்த லக்கி சான்ஸ்.