மார்ச் மாதம் திரைக்கு வரும் ‘அதிதி’

137

‘வீரம்’ படத்தில் அஜித் பேசும் வசனங்களுக்கு எல்லாம் தியேட்டரில் கைதட்டல் பறக்கிறதே, அதற்கு சொந்தக்காரர் வசனகர்த்தா பரதன் தான். இவர் வேறு யாருமல்ல.. விஜய் நடித்த ‘அழகிய தமிழ்மகன்’ படத்தை இயக்கிய அதே பரதன் தான்.

மலையாளத்தில் வெளியான ‘காக்டெயில்’ படம் தான் தற்போது தமிழில் ‘அதிதி’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.. இந்தப்படத்தைத் தான் தற்போது இயக்கி வருகிறார் பரதன். கதாநாயகனாக நந்தா நடிக்க, இன்னொரு நாயகனாக நிகேஷ்ராம் நடிக்கிறார். கதாநாயகியாக நடிக்கிறார் அனன்யா.

நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைக்கிறார். முதன்முறையாக பாடகர் பிரசன்னா முக்கிய வேடத்தில் நடிகராக நடிக்கிறார். மொத்தத்தில் காதல்,பேமிலி, கிரைம் கலந்த திரில்லர் கதையாக உருவாகும் ‘அதிதி’ மார்ச் மாதம் வெளியாகிறது.

Leave A Reply

Your email address will not be published.