50வது நாள் கொண்டாட்டத்தில் ‘மெட்ராஸ்’..!

224

 

கடந்த மாதம் கார்த்தி நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’ படத்தின் வெற்றியைப்பற்றி தனியாக நாம் விவரிக்க தேவையில்லை. வடசென்னை மக்களின் வாழ்வியலை, அவர்களின் அரசியலை எந்தவிதமான  மேல்பூச்சும் இல்லாமல் புதிய கோணத்தில் சொல்லியிருந்தார் இயக்குனர் ரஞ்சித்.

‘மெட்ராஸ்’ இவ்வளவு மாஸ் ஹிட் ஆகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.. ஏன் கார்த்தியே எதிர்பார்க்கவில்லை மெட்ராஸ் படத்தை பார்த்த சூப்பர்ஸ்டாரே, “சூப்பர் கண்ணா சூப்பர்…. கலக்கிட்ட.. என ரஞ்சித்தை மனம் திறந்து பாராட்டினார்.

இந்த மொத்த டீமின் உழைப்புக்கு கிடைத்த மரியாதைதான் இன்று ‘மெட்ராஸ்’ படத்தை ஐம்பது நாளை தொட வைத்திருக்கிறது. இனியும் ஓடவைக்க இருக்கிறது. இந்தப்படத்தின் மூலம் கார்த்திக்கு தான் போகவேண்டிய பாதையும், படங்களை தேர்ந்தெடுக்கும் சூட்சுமமும் பிடிபட்டிருக்கும் என்பது உண்மை..

Comments are closed.