இசைஞானியின் அண்ணன் பாவலர் வரதராஜன் கம்யூனிஷ மேடைகளில் புரச்சிகரமான பாடல்களை பாடி அன்றைய அரசியலை மக்களுக்கு தோலுரித்துக் காட்டியவர். அவர் அன்று மேடையில் அவர் முழங்கிய கம்யூனிஷ பாடல்களை எல்லாம் நீண்ட காலம் தேடி சேகரித்துக் கொண்டிருந்தார் இசைஞானி. அந்த பாடல்களை புத்தகமாக்க முடிவு செய்து ஒவ்வொரு பாடலின் போது நடந்த சம்பவங்களை எல்லாம் நினைவு படுத்தி அந்த நிகழ்வுகளையும் பதிவு செய்திருக்கிறார்.
விரைவில் வெளியாகப்போகிறது அந்த புத்தகம்.. அதோடு தன் ஆருயிர் நண்பர் பாலுமகேந்திராவின் அடுத்த படத்திற்கு இசையமைக்கவும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதற்காக இன்று காலையில் பாலுமகேந்திரவுடன் புதிய படத்திற்காக பாடல்களையும் கம்போஸ் செய்திருக்கிறார் இசைஞானி. இந்த படத்தை தயாரிக்கப் போகிறவர் சசிக்குமார்.