
இதற்கு முன் வெளியான சிம்புவின் ‘வாலு’ படம் போலவே அவர் நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படமும் பலமுறை ரிலீஸ் தேதிகளை அறிவித்து சாதனை படைத்துள்ளது.. தான் இயக்கிய கதகளி, பசங்க-2 படங்களை குறித்த நேரத்தில் ரிலீஸ் செய்ய முடிந்த இயக்குனர் பாண்டிராஜூக்கு இது நிச்சயம் பின்னடைவு தான் என்றாலும், ரிலீசில் முடிவெடுக்கும் முழு அதிகாரம் அவர் கையில் இல்லையே..!
ஆனாலும் இந்தமுறை வரும் மே-20ஆம் தேதி ‘இது நம்ம ஆளு’ படம் சத்தியமாக ரிலீஸ் ஆகிறது என உறுதிபட கூறியுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். ஆக இந்தமுறை படம் வெளியாகும் என உறுதியாக நம்புவோம்.. சிம்புவுடன், நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி என கலக்கல் கூட்டணி இணைந்திருப்பதால் படம் ரசிகர்களுக்கு கோடை விருந்தாக அமையும் என நம்பலாம்.
Comments are closed.