
‘அஞ்சான்’ படத்திற்கான சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று ‘தி பார்க்’ ஹோட்டலில் நடைபெற்றது. இதில் சூர்யா பேசும்போது, “அஞ்சான் படப்பிடிப்பு நடந்து முடிந்த கடைசி நாள் யூனிட்டை விட்டு பிரியும்போது அது என் காலேஜ் ஃபேர்வெல்டேவை ஞாபகப்படுத்தியது.
இந்தப்படம் வாரக்கடைசியில் வெளியாகும் ஒரு சாதாராண ஆக்ஷன் திரில்லராக இல்லாமல் அதையும் தாண்டி ரசிகர்களை திருப்திப்படுத்தி அனுப்பும் ஒரு படமாக இருக்கும். ‘அஞ்சான்’ படத்தின் டீசருக்கான வரவேற்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் நானும் பேஸ்புக்-ட்விட்டர் சமூக வலைதளத்தில் இணையப்போகிறேன்” என்று குறிப்பிட்டார்.
Comments are closed.