தீபிகா படுகோனைப் பொறுத்தவரை எப்போதுமே ஷாருக்கானின் மனம் கவர்ந்த நடிகையாகவே காணப்படுகிறார். அவர் அறிமுகமானது கூட ஷாருக்கான் படத்தில் என்பதாலோ அல்லது அவருடன் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ மற்றும் இப்போது ‘ஹேப்பி நியூ இயர்’ என தொடர்ந்து அவருடைய படங்களில் சேர்ந்து நடிப்பதாலோ இதுபோன்ற ஒரு தோற்றம் உருவாகிவிட்டது.
இன்னொரு பக்கம் தமிழ், தெலுங்கில் உட்பட பல இளம் நடிகர்கள் தீபிகாவுடன் ஜோடி சேர ஆசைப்பட்டாலும் தீபீகா கேட்கும் சம்பளத்தை பார்த்து ஒதுங்கியே நிற்கின்றனர். ஆனால் பிஸியாக நடித்துவரும் தீபிகாவுக்கோ பாலிவுட்டின் மிஸ்டர் பிரம்மச்சாரியான சல்மான்கானுடன் ஒரு படத்திலாவது நடித்துவிடவேண்டும் என்பது ஆசை. அது இன்னும் நிறைவேறாமல் தள்ளிக்கொண்டே போகிறது.
பொதுவாக தனது படங்களின் கதாநாயகி விவகாரங்களில் தான் தலையிடுவதில்லை என்று சொல்லி வருகிறார் சல்மான். தற்போது சூரஜ் பார்ஜத்யா டைரக்ஷனில் சல்மான் நடிக்க இருக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்துவிட வேண்டும் என தீபிகா வலைவீசியிருக்கிறார்.