“நான் சண்டை போடவில்லை” –டேனியல் பாலாஜி

216

டேனியல் பாலாஜி ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அதில் இரண்டு விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். ஒன்று.. அவர் கட்டாயம் சைக்கோவாக இருப்பார்.. மற்றது க்ளைமாக்ஸில் ஹீரோவுடன் கராத்தே ஸ்டெப்ஸ்ஸெல்லாம் வைத்து சண்டை ஒன்று இருக்கும்..

ஆனால் ஐஸ்வர்யா தனுஷ் தான் இயக்கிவரும் ‘வை ராஜா வை’ படத்தில் இந்த இரண்டும் இல்லாத ஒரு புதிய டேனியல் பாலாஜியை காட்டவிருக்கிறார்.. “இந்தப்படத்தில் நான் வில்லனும் இல்லை.. எனக்கு சண்டைக்காட்சியும் இல்லை.. ஆனால் அழுத்தமான வசனங்களில் விளையாடும் கதாபாத்திரம்” என்கிறார் டேனியல் பாலாஜி.

ஆனால் மார்ச் மாதத்தில் தான் ஒரு இயக்குனராகவும் களம் இறங்கும் ‘குறோனி’ படத்தில் வில்லனாகத்தான் நடிக்கிறார் டேனியல் பாலாஜி.

Leave A Reply

Your email address will not be published.