“பெரிய நடிகர்களுக்காக என்னால் காத்திருக்க முடியாது” – லட்சுமி ராமகிருஷ்ணன்..!

55

ஆரோகணம் படத்தை இயக்கியதின் மூலம் தன்னை ஒரு இயக்குனராகவும் அடையாளப்படுத்திக்கொண்டதோடு அந்தப்படத்தின் மூலமாக அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றார் குணச்சித்திர நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இப்போது அடுத்த படமான ‘நெருங்கி வா முத்தமிடாதே’ படத்தை இயக்கி, ஆடியோ ரிலீஸையும் நடத்தி முடித்துவிட்டார்.

நேற்று பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய லட்சுமி இராமகிருஷ்ணன், “இந்தப்படத்தை மிகப்பெரிய ஒரு ஹீரோவை வைத்துதான் இயக்குவதாக இருந்தேன். ஆனால் அவர்களின் தேதிகளுக்காக என்னால் காத்துக்கிடக்க முடியாது என்பதால் புதிய ஹீரோவாக ஷபீரை வைத்து இயக்கியுள்ளேன்” என்று கூறினார். இந்தப்படத்தில் பியா மற்றும் ஸ்ருதி ஹரிகரன் இருவரும் கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள்..

Comments are closed.