‘வாலு’ தாமதமாக நான் காரணம் இல்லை” –ஹன்சிகா..!

68

சிம்பு, ஹன்சிகா நடிக்கும் படத்திற்கு ‘வாலு’ என பெயர் வைத்ததாலோ என்னவோ படமும் அனுமார் வால் போல நீண்டுகொண்டே போகிறதே தவிர முடிவதற்கான அறிகுறி எதுவும் புலப்படவில்லை. இதில் படம் தாமதமாவதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. அதில் ஹன்சிகா பக்கமும் தாமதத்திற்கு காரணம் இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.

இதனை கேள்விப்பட்ட ஹன்சிகா தனது தரப்பில் உள்ள நியாயங்களை எடுத்து வைத்துள்ளார்.. “என்னிடம் முதலில் கேட்கப்பட்ட நாட்கள் 60 மட்டுமே.. ஆனால் அதன்பின் இன்னும் 80 நாட்கள் கொடுத்தேன். தற்போதுகூட செப்-7முதல் 9 வரை தேதிகள் கேட்டார்கள்.. நானும் கொடுத்தேன். ஆனால் படப்பிடிப்பு நடைபெறவில்லை.. ஆனால் இனி கொடுப்பதற்கு என்னிடம் தேதிகள் இல்லாத அளவுக்கு என்னுடைய கால்ஷீட் டைரி புல்லாகி விட்டது.

இப்போதுகூட என்னுடைய தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் சில நாட்களை விட்டுத்தர தயாராக இருக்கிறார்கள். ஆக என்பக்கம் எந்தவிதமான தவறுமில்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன். இதுகூட நாளை என் பக்கம் யாரும் விரல் நீட்டி பேசிவிடக்கூடது என்பதற்காகத்தான்” என கிளியர் ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்கிறார் ஹன்சிகா. அப்போ பிரச்சனை வேறெங்கேயோ தான் இருக்கு..

Comments are closed.