பதினைந்து நாளில் தயாரான திகில் படம்..!

224

 

நடிகர் கரணை வைத்து ‘தீ நகர்’ என்ற படத்தை  இயக்கியவர் இயக்குனர் திருமலை. தொடர்ந்து ‘நெல்லை சந்திப்பு’, ‘காசேதான் கடவுளடா’, ‘அகம் புறம்’ ஆகிய படங்களை இயக்கிய திருமலை தற்போது ‘மான் வேட்டை’என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை வேட்டையாட திரும்பி வந்திருக்கிறார். இந்தப் படத்தில் கிட்டத்தட்ட அனைவருமே புதுமுகங்கள் தான் நடிக்கிறார்கள்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால்  ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டுக்குள், அதிலும் 15 நாட்களுக்குள்ளேயே இந்த’மான் வேட்டை’ படம் தயாராகி இருக்கிறது… ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டுக்குள் ஒரு படம் எடுக்க முடியும் என்பதை நிரூபிக்கவே இப்படத்தை இயக்கியுள்ளாராம் இயக்குநர் திருமலை.

நான்கு நண்பர்கள் தங்களின் காதலிகளோடு அந்த மலைப் பிரதேசத்திற்கு சுற்றுலா வருகிறார்கள். இயற்கையை ரசித்து சந்தோஷமாக இருக்கிறார்கள். அப்போது எதிர்பார்க்காமல் சில திடுக்கிடும் சம்பவங்கள் நடக்கின்றன. இதை மையமாக வைத்து திகில் பின்னணியில் கதை நகர்கிறதாம்.

Comments are closed.