பிரசாந்த் கோல்டு டவரை பார்த்து வாய்பிளந்த இந்தி நடிகை..!

256

இந்தியில் ரன்பீர் கபூர், ஜான் ஆபிரகாம், ஷாகித் கபூர் ஆகியோருடன் ஹிட் படங்களில் நடித்தவர் பிரபல இந்தி நடிகை நர்கீஸ் பக்ரி. இவர் இப்போது அருண்ராஜ் வர்மா இயக்கி வரும் ‘சாகசம்’ படத்தில் பிரசாந்துடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்..

இந்த பாடல் காட்சியை பிரம்மாண்ட செட் போட்டு தொடர்ந்து ஏழு நாட்கள் படமாக்குகின்றனர்.. ராஜுசுந்தரம் மாஸ்டர் நடனம் அமைக்க, தமன் இசையமைத்துள்ள இந்தப்பாடலுக்கு 50 ரஷியன் டான்சர்களுடன் நம்ம ஊர் டான்சர்கள் 100 பெரும் ஆடுகிறார்களாம்.

இந்த படத்திற்காக புடாபெஸ்ட் நகரில் தான் நடித்துகொண்டிருந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு நேராக சென்னை வந்த நர்கீஸ், டி.நகரில் உள்ள பிரசாந்த்துக்கு சொந்தமான கோல்டு டவரை பார்த்து அதிசயித்து போனாராம். மேலும் அங்கிருந்த புதுவகையான நகை டிசைன்களையும் பார்த்து பிரமித்தாராம். இப்போ தெரிஞ்சிருக்குமே பிரசாந்த் உண்மையான ‘தங்கமகன்’ தான் என்று..

Comments are closed.