நாட்கள் தான் எவ்வளவு வேகமாக ஓடுகின்றன. நேற்றுத்தான் வந்தது மாதிரி இருக்கிறது. ஆனால் ‘மின்னலே’ படம் மூலமாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ்சினிமாவிற்குள் நுழைந்து 12 வருடங்கள் முடிந்துவிட்டன. இசையால் ரசிகர்களை வசப்படுத்துவது என்பது ஒரு வரம். அதுவும் நீண்ட காலத்துக்கு தங்களது இசையால் ரசிகர்களைக் கட்டிப்போட்ட இசையமைப்பாளர்கள் வெகு சிலரே. அப்படிப்பட்ட சிலரில் ஹாரிஸ் ஜெயராஜும் ஒருவர்.
சிலர் தாங்கள் அறிமுகமான நேரங்களில் அசத்தினாலும் அதன்பின் நிலைத்து நிற்க முடியாமல் காணாமல் போய்விடும் நிகழ்வுகள் நமது சினிமாவில் நிறையவே உண்டு. ஆனால் ரசிகர்களின் நாடித்துடிப்பை சரியாக கணித்து, அதற்கேற்ப பாடல்களை தருவதால் ஹாரிஸ் ஜெயராஜின் கொடி இந்த 12 வருடங்களில் கீழே இறங்கியதே இல்லை. பதிமூன்றாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் அவரது இசைப்பணி தொடர behind frames தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.