இளைய தளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

216

Vijay-2

1992ல் ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் விஜய் அறிமுகமானபோது, இன்று இருக்கும் உயரத்தை எட்டுவார் என்று யாரும் நினைத்து பார்த்திருக்க முடியாது. ஆனால் இருபது வருட கடுமையாக உழைப்பில்தான் இந்த உயரத்தை அடைந்திருக்கிறார் விஜய். இருப்பதிலேயே கடினமான செயல் குழந்தைகளை கவர்வதுதான். காசு, பணம் கொடுத்து வரக்கூடியதல்ல அது. ர‌ஜினிக்குப் பிறகு குழந்தைகள் விரும்பும் நடிகர்களில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் என்றால் அது விஜய்தான்.

நடனமா, ஆக்‌ஷனா இல்லை காமெடியா… எது அவர்களை ஈர்த்தது என்று தெ‌ரியாது. ஒரு வீட்டில் நான்கு குழந்தைகள் இருந்தால் இரண்டு பேர் விஜய் ரசிகர்களாகவே இருக்கிறார்கள். இன்றும் தமிழ் சினிமா ஹீரோக்களில் டான்ஸ் ஆடுவதில், விஜய்யை மிஞ்ச ஆள் இல்லை என்பதை மற்ற ஹீரோக்களின் ரசிகர்களும் ஒப்புக்கொள்வார்கள்.

விஜய் சினிமாவுக்குள் நுழைந்தது வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். அவரின் ஆரம்பகால வளர்ச்சிக்கு அவரது தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தான் காரணம் என்பதையும் மறுக்கமுடியாது தான். ஆனால் அதன்பின் சினிமாவில் விஜய் கரடுமுரடான பாதையை கடந்து வெற்றி தோல்வி என்கிற மேடு பள்ளங்களை தாண்டித்தான் இன்று சிகரத்தை தொட்டிருக்கிறார். இன்று பிறந்தநாள் காணும் இளையதளபதி விஜய்க்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Comments are closed.