ஹேப்பி பர்த்டே வரலட்சுமி..!

116

இன்று நடிகர்களின் வாரிசுகள் நடிக்கவருவது என்பது சகஜமான ஒன்றாகிவிட்டது. ஆனால் வந்தபின் சினிமாவில் நிலைத்து நிற்பது அவரவர் திறமை மற்றும் அதிர்ஷ்டத்தை பொறுத்தது அந்த வகையில் சரத்குமார் மகள் வரலட்சுமிக்கு நடிப்பும், அழகுடன் கூடிய திறமை இருந்தும்கூட இப்போதுதான் அதிர்ஷ்டம் கைகூடிவர ஆரம்பித்திருக்கிறது.

பாலா இயக்கும் ‘கரகாட்டம்’ படத்தில் சசிகுமார் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வரலட்சுமியைத் தேடி வந்திருக்கிறது. இன்னொரு புறம் விஜய் சேதுபதியுடன் ‘வசந்தகுமாரன்’ படத்திலும் ஜோடியாக நடிக்க இருக்கிறார். இதற்கிடையே விஷாலுடன் நடித்து நீண்ட நாட்களாக ரிலீஸாகாமல் இருந்த ‘மதகஜராஜா’வும் விரைவில் வெளியாக இருக்கிறது.

இதுவும் தவிர தற்போது கன்னடத்தில் ‘மான்க்யா’ என்ற படத்தில் ‘நான் ஈ’ புகழ் சுதீப் ஜோடியாக நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபாஸ் நடித்த ‘மிர்ச்சி’ படத்தின் ரீமேக்கான இந்தப்படத்தில் அனுஷ்கா நடித்த கேரக்டரில் வரலட்சுமி நடிக்கிறார். இதன்மூலம் கன்னட திரையுலகிலும் காலடி எடுத்துவைத்திருக்கிறார் வரலட்சுமி.

ஆக இனிவரும் காலம் வரலட்சுமியின் காலம் என்பது உறுதி.. இன்று பிறந்தநாள் காணும் வரலட்சுமிக்கு behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Leave A Reply

Your email address will not be published.