ஹேப்பி பர்த்டே டூ எஸ்.ஆர்.பிரபு..!

264

sr prabu 1

இது நடிகர்களின் படம், இது இயக்குனர்களின் படம் என அறியப்படும் காலம் மாறி, இது இந்த தயாரிப்பாளரின் படம், இந்த நிறுவனம் தயாரித்த படம் என்று சொல்லும் அளவுக்கு இன்று தமிழ்சினிமாவில் சில தயாரிப்பாளர்கள் மட்டுமே கவனம் பெற்றுள்ளார்கள்.. அந்த வகையில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோகிரீன் நிறுவனத்தின் மிக முக்கிய தூண்களில் ஒருவராக விளங்குபவர் தான் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு..

கடந்த 11 வருடங்களாக சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரின் திரையுலக வெற்றி பயணத்திற்கு உறுதுணையாக நின்று தனது பங்களிப்பையும் தந்து வருகிறார் எஸ்.ஆர்.பிரபு தவிர ‘ஜோக்கர்’ மாதிரியான சமூக நோக்கிலான கதைகளையும் ‘காஷ்மோரா’ போன்ற பிரமாண்டமான பரீட்சார்த்த படங்களையும் தயாரிப்பதற்காகவே ‘ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ்’ என்கிற இன்னொரு நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறார் எஸ்.ஆர்.பிரபு.

அதுமட்டுமல்ல நயன்தாரா நடித்த ஹாரர் த்ரில்லர் படமான ‘மாயா’வை தயாரித்ததன் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த பொடன்ஷியல் நிறுவனமும். எஸ்.ஆர்.பிரபு தலைமையிலான ஐவர் கூட்டணியில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இதன் அடுத்த வெளியீடாக ‘மாநகரம்’ படம் தயாராகி வருகிறது.

ரசிகர்களின் நாடித்துடிப்பை சரியாக அறிந்து, கதையை தேர்வு செய்வதில் மிகுந்த அக்கறை காட்டி படங்களை தயாரித்து வரும் எஸ்.ஆர்.பிரபு தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத மிக முக்கியமான தயாரிப்பாளர்களில் ஒருவர்.. இத்தனை சிறப்பம்சங்கள் இருந்தாலும் தன்னை எங்கும் எதிலும் முன்னிலைப்படுத்தி காட்டிக்கொள்ள விரும்பாமல், திறமைசாலிகளை வெளியுலகிற்கு அடையாளம் காட்டும் வேலையை எந்தவித ஈகோவும் இல்லாமல் செய்து வருகிறார் எஸ்.ஆர்.பிரபு.

இன்று பிறந்தநாள் காணும் எஸ்.ஆர்.பிரபுவுக்கு நமது behind frames தனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Comments are closed.