தமன்னா.. தென்னிந்திய சினிமாவின் ஸ்வீட் ஹார்ட். தமிழ்ரசிகர்களின் மனதில் தமன்னாவுக்கு நீங்காத ஒரு இடம் எப்போதுமே உண்டு. ‘கல்லூரி’யில் சோகமே உருவாக அறிமுகமான தமன்னா இப்படி விஸ்வரூபம் எடுத்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக மாறுவார் என யாருமே அப்போது கணித்திருக்க மாட்டார்கள்.
ஒருகட்டத்தில் தமிழில் தமன்னாவுக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்க, இனி அவர் அவ்வளவுதான் என மற்றவர்கள் நினைத்துக்கொண்டிருக்க, ‘வீரம்’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாகி அதிரடி எண்ட்ரி கொடுத்து தன் இடம் தனக்கு மட்டும் தான் என உறுதிப்படுத்தினார்.
தற்போது ராஜமௌலி டைரக்ஷனில் ‘பாஹுபாலி’ படத்தில் பாஹுபாலி, சிவுடு என இரண்டு வேடங்களில் நடிக்கும் பிரபாஸுக்கு அதில் ஒரு கேரக்டருக்கு ஜோடியாக தற்போது தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளார் ராஜமௌலி. தொடர்ந்து முன்னணியில் இருக்கும், இன்று பிறந்தநாள் காணும் தமன்னாவுக்கு, behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.