நகைச்சுவை நடிகர் சூரி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்றுள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஈடுகொடுத்து காமெடி கேரக்டர்களில் சிறப்பாக நடித்துவருகிறார் சூரி. ஆரம்பத்தில் காதல், தீபாவளி என்று சில படங்களில் நடித்திருந்தாலும் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு திரைப்படம்தான் ஒரு காமெடி நடிகராக சூரியை அடையாளம் காட்டியது.
அடுத்து நான் மகான் அல்ல, களவாணி படங்கள் சூரிக்கு நல்ல வரவேற்பை கொடுக்க, வேலாயுதம் படத்தில் விஜய்க்கு நண்பனாக நடித்தார். மேலும் சுந்தரபாண்டியன் படத்தில் சசிகுமாருடன் இணைந்து நகைச்சுவை ராஜாங்கமே நடத்தியிருந்தார் சூரி.
சமீபத்தில் வெளியான தேசிங்குராஜா படத்திலும் இவரது காமெடி பேசப்படுகிறது. மீண்டும் விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடிப்பதோடு தனுஷுடன் முதன்முறையாக நய்யாண்டி படத்திலும் இணைந்து நடித்திருக்கிறார். தற்போது கைநிறைய படங்களுடன் நிற்க நேரமில்லாமல் படங்களில் நடித்துவரும் சூரி இன்னும் பல வெற்றிகளைப்பெற Behind frames அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
175145 823744hi good page i will definaely come back and see once again. 190098