இன்றுள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஈடுகொடுத்து காமெடி கேரக்டர்களில் சிறப்பாக நடித்துவருகிறார் சூரி. ஆரம்பத்தில் காதல், தீபாவளி என்று சில படங்களில் நடித்திருந்தாலும் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு திரைப்படம்தான் ஒரு காமெடி நடிகராக சூரியை அடையாளம் காட்டியது.
அடுத்து நான் மகான் அல்ல, களவாணி படங்கள் சூரிக்கு நல்ல வரவேற்பை கொடுக்க, வேலாயுதம் படத்தில் விஜய்க்கு நண்பனாக நடித்தார். மேலும் சுந்தரபாண்டியன் படத்தில் சசிகுமாருடன் இணைந்து நகைச்சுவை ராஜாங்கமே நடத்தியிருந்தார் சூரி.
சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்த சூரியின் காமெடி நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷுடன் முதன்முறையாக நய்யாண்டி படத்திலும் இணைந்து நடித்தார்.
விஜய்யுடன் வேலாயுதம், ஜில்லா படங்களில் நண்பனாக நடித்தவர் சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் சிறப்பாக நடித்தார். தற்போது மீண்டும் நான்காவது முறையாக விமலுடன் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருக்கிறார் சூரி.
முன்பெல்லாம் இயக்குனர்கள் கொடுத்த ஸ்கிரிப்ட்டில் மட்டும் தனது திறமையை காட்டிய சூரி, தற்போது தனது படங்களின் நகைச்சுவைக் காட்சிகளில் மிகுந்த கவனம் செலுத்துவதோடு, சந்தானத்தின் பாணியில் சில சிச்சுவேசன்களுக்கான வசனங்களை தானே உருவாக்குகிறார். அவற்றை இயக்குனரின் ஒப்புதலோடு பேசி கைதட்டலையும் அள்ளுகிறார்.
ஆக, சந்தானத்தை தொடர்ந்து அவருக்கு அடுத்தபடியாக கைநிறைய படங்களுடன் நிற்க நேரமில்லாமல் படங்களில் நடித்துவருகிறார் சூரி. இன்று பிறந்தநாள் காணும் சூரிக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Comments are closed.