புரட்சித்தமிழனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

181

சினிமாவில் சாதிக்கவேண்டும் என வருபவர்களுக்கு தன்னம்பிக்கை ரொம்ப முக்கியம். தன்னம்பிக்கையுடன் கூடிய திறமைக்கு என்றுமே மரியாதை உண்டு. பத்து அடியாட்களில் ஒருவராக வந்தாலும் தனது திறமையான நடிப்பால் மெயின் வில்லனாக மாறி, அதிலும் புதிய பரிணாமத்தை காட்டியதால் ஒரு அருமையான கதாநாயகனாகவும் தன்னை மாற்றிக்கொண்ட நடிகர் சத்யராஜை விட தன்னம்பிக்கைக்கு உதாரணமாக வேறு யாரை சொல்லிவிட முடியும்?.

வில்லனாக நடித்து கதாநாயகனாக மாறிய சிலருக்கும், வில்லனாக நடித்து கதாநாயகனாக மாற விரும்பும் பலருக்கும் சத்யராஜ்தான் ரோல் மாடல் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. இன்றும் குணச்சித்திர வேடங்களை தேர்ந்தெடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி என மொழிபேதம் இல்லாமல் பரபரப்பாக நடித்துவருகிறார் சத்யராஜ். இன்று பிறந்தநாள் காணும் புரட்சித்தமிழன் சத்யராஜுக்கு behind frames தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

1 Comment
  1. spiritualist says

    410364 921151Some genuinely intriguing data, properly written and broadly user pleasant. 728534

Leave A Reply

Your email address will not be published.